துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜமியா பல்கலை. மாணவர் டிஸ்சார்ஜ்..

ஜமியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர் இன்று(ஜன.31) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆங்காங்கே மாணவர்களும், இஸ்லாமிய அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். அந்த மாணவர்கள் நேற்று பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்ேகாட் வரை பேரணியாக சென்றனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
அவர்கள், நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது அந்த பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவர் சாலையில் பேரணிக்கு முன்பாக வேகமாக சென்று சிறிது தூரத்தில் இருந்து, பேரணியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். அப்போது அவர், நீங்கள் கேட்ட சுதந்திரம் இதோ என்று கத்தினார்.

துப்பாக்கிச் சூட்டில் சதாப் பரூக் என்ற இதழியல் துறை முதுகலை பட்ட வகுப்பு மாணவர் படுகாயம் அடைந்தார். கையில் பலத்த காயத்துடன் அவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன்பின், துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இரவிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காலையில் அந்த மாணவர் சதாப், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

You'r reading துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜமியா பல்கலை. மாணவர் டிஸ்சார்ஜ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக உள்ளாட்சிகளுக்கு 3 மடங்கு நிதி ஒதுக்குவோம்.. அமைச்சருக்கு நேரு பதிலடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்