லாரி மீது சொகுசு பஸ் மோதி 14 பேர் பலி, 30 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதியதில் 14 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில் இருந்து பீகாரில் உள்ள மோடிகரி நோக்கி தனியார் சொகுசு பஸ் நேற்றிரவு சென்றது. படுக்கை வசதி கொண்ட இந்த பஸ்சில் 50 பேர் சென்றனர். இந்த பஸ் ஆக்ரா- லக்னோ விரைவு நெடுஞ்சாலையில் சென்றது. உ.பி. மாநிலம் பெரோசாபாத் அருகே பஸ் படுவேகத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது. தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.

உடனடியாக அருகில் உள்ள கிராமத்து மக்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அனைவரும் எட்டாவா மாவட்டடம் சபாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சில் சென்ற 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ஐ.ஜி. சதீஷ் கணேஷ், எஸ்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading லாரி மீது சொகுசு பஸ் மோதி 14 பேர் பலி, 30 பேர் காயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்