சமூக ஊடகங்களிலிருந்து மோடி விலகுவதாகச் சொன்னது எதற்காக?

பிரதமர் மோடி திடீரென தனது சமூக ஊடக கணக்குகளை விட்டு விடப் போவதாகக் கூறியிருந்த ரகசியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்.

மோடி நேற்றிரவு(மார்ச்2) தனது டிவிட்டர் பக்கத்தில்,பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களிலிருந்து விலகிக் கொள்ளலாமா? என்று கடந்த ஞாயிறன்று எண்ணிக் கொண்டிருந்தேன். விரைவில் உங்களிடம் சொல்கிறேன் என்று பதிவிட்டார். இதற்கு மோடி ஆதரவாளர்கள் மிகவும் கவலையாக ரீட்விட் போட்டனர். நீங்கள்தான் வழிகாட்டி, நீங்கள் விலகக் கூடாது என்று பதிவிட்டனர். அதே சமயம், மோடி எதிர்ப்பாளர்கள், இதுதான் நீங்க எடுத்த முதல் நல்ல முடிவு என்ற ரீதியில் பதிவிட்டனர்.

இந்நிலையில், மோடி அந்த ட்விட் போட்டதற்கான ரகசியத்தைக் கலைத்தார்.

அவர் இன்று வெளியிட்ட பதிவில், இந்த ஆண்டு மகளிர் தினத்தில்(மார்ச் 8), நான் எனது சமூக ஊடக கணக்குகளை எந்த பெண்களின் பணியும், வாழ்க்கையும் நம்மைக் கவர்ந்ததோ, அவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த அப்படி தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் பணிகளையும், வாழ்க்கையையும் இங்கே பகிருங்கள். இது இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும். நீங்கள் வீடியோக்களையும் பகிரலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மோடியின் ஆதரவாளர்கள் இதை ரசித்து வரவேற்றுள்ளனர்.

You'r reading சமூக ஊடகங்களிலிருந்து மோடி விலகுவதாகச் சொன்னது எதற்காக? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமித்ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்