கச்சா எண்ணெய் விலை சரிவு.. பெட்ரோல் விலையைக் குறைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் நிலையில், அதன் பலன் இந்திய மக்களுக்குக் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலைவாசி குறைந்தால் அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தும் அரசாங்கம், விலை குறையும்போது அதைக் குறைக்கக் கூடாதா?
இவ்வாறு ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.

You'r reading கச்சா எண்ணெய் விலை சரிவு.. பெட்ரோல் விலையைக் குறைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநயகரிடம் அளித்த பாஜக...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்