நகரங்களில் முழு அடைப்பு.. மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் யோசனை

இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்த பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று(மார்ச் 18) வரை 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இது வரை 9000 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த நோய் தாக்குதலில், சுமார் 3,300 பேர் உயிரிழந்துள்ளனர். 81,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 151 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

உலக சுகாதார நிறுவன டைரக்டர் ஜெனரல் அறிக்கையைப் படித்த பின்பும், நாம் நகரங்களில் 2 முதல் 4 வாரங்களுக்கு முழு அடைப்பு செய்வதற்குத் தயக்கம் காட்டக் கூடாது. இத்தாலி, ஈரான் நாடுகளில் எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவியது என்பதை நாம் பார்த்தோம். இதற்கு பிறகும், நாடு முழுவதும் நகரங்களில் முழு அடைப்பு செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்? மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வில், கொரோனா வைரஸ் சாதாரணமாகப் பரவவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. எனவே, நோய் பாதித்தவரின் உறவினர்கள் மற்றும் அவரது தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரவியிருக்குமோ என்ற சந்தேகம் மட்டுமே இருக்கிறது. இந்த 2வது கட்டத்திலேயே நாம் முழு அடைப்பு செய்வதன் மூலம் நோய் பரவாமல் முழுமையாகத் தடுக்கலாம்.
இவ்வாறு சிதம்பரம் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

You'r reading நகரங்களில் முழு அடைப்பு.. மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் யோசனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா வைரஸ் சீனாவில் புதிதாக யாருக்கும் பரவவில்லை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்