இந்தியாவில் இதுவரை 873 பேருக்கு கொரோனா..

873 persons affected Coronavirus in India:

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தோன்றி உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ், அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.இன்று காலை 9.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இது வரை 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கும், கேரளாவில் 173 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா 55, குஜராத் 53, ராஜஸ்தான் 48, தெலங்கானா 48, உத்தரப்பிரதேசம் 45, டெல்லி 39, பஞ்சாப் 38, தமிழ்நாடு 38, ஹரியானா 33, மத்தியப் பிரதேசம் 30, காஷ்மீர் 18, மேற்கு வங்கம் 15 மற்றும் லடாக்கில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.மேலும், ஆந்திரா 14, பீகார் 9, சண்டிகர் 7, சத்தீஸ்கர் 6, உத்தரகாண்ட் 5, கோவா 3, இமாச்சலப் பிரதேசம் 3, ஒடிசா 3, அந்தமான் 2, மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.z

You'r reading இந்தியாவில் இதுவரை 873 பேருக்கு கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்