தப்லிகி ஜமாத் மீது 2 வழக்குகள் பதிவு.. டெல்லி போலீஸ் நடவடிக்கை

2 FIRs against Tablighi workers for spreading disease in hospital, quarantine centre

கொரோனா தனிமை மையத்தில் வேண்டுமென்றே எச்சில் துப்பியதாக, கொரோனா பாதித்த தப்லிகி ஜமாத்தைச் சேர்ந்த சிலர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(ஏப்.7) காலை வரை 4,757 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 132 பேர் உயிரிழந்துள்ளனர்.


மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2வது இடத்தில் தமிழ்நாட்டில் 621 பேருக்கும், 3வதாக டெல்லியில் 528 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதற்கு, டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற சுமார் 1000 பேருக்குத் தொற்று உறுதியானதுதான் காரணம் எனத் தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில், டெல்லியில் நாரேலா பகுதியில் தனிமை மையங்கள் அமைத்து, கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களில் சிலர் குரூரமாகச் செயல்படுகின்றனர். மருத்துவப் பணியாளர்களைத் தாக்குவது, மைய வளாகத்தில் கண்ட இடங்களில் வேண்டுமென்றே எச்சில் துப்புவது போன்ற செயல்படுகின்றனர். இதே போல், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையிலும் சிலர் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல்கள், மற்ற ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பாதித்து வருகிறது.
இந்நிலையில், வேண்டுமென்றே எச்சில் துப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட கொரோனா பாதித்த தப்லிகி ஜமாத்தினர் மீது டெல்லி போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் உ.பி. மாநிலம் பரபங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது இ.பி.கோ சட்டம், தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

You'r reading தப்லிகி ஜமாத் மீது 2 வழக்குகள் பதிவு.. டெல்லி போலீஸ் நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகாராஷ்டிராவில் 891 பேருக்கு கொரோனா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்