இந்தியாவில் கொரோனா பலி 507 ஆக அதிகரிப்பு.. 15,712 பேருக்கு நோய்த் தொற்று..

Indias Covid-19 cases cross 15,000, death toll rises to 507

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 15,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 507 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 15,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 2330 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 12,974 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.


மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களில்தான் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நாடு முழுவதும் 56 மாவட்டங்களில் கொரோனா தீவிரமாகப் பரவியிருக்கிறது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் குறிப்பிட்ட 15 மாவட்டங்களில்தான் உள்ளது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. உலக அளவில் இன்று காலை நிலவரப்படி, 23 லட்சத்து 28,600 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. ஒரு லட்சத்து 60,706 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

You'r reading இந்தியாவில் கொரோனா பலி 507 ஆக அதிகரிப்பு.. 15,712 பேருக்கு நோய்த் தொற்று.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் ஊழலா? ஸ்டாலின் புகாருக்கு அரசு விளக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்