வங்கி கடன் தவணை செலுத்த மேலும் 3 மாத அவகாசம்..

RBI extends loan moratorium by additional 3 months.

வங்கிக் கடன் தவணை செலுத்த மேலும் 3 மாத அவகாசம் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ஊரடங்கு நிலவரத்தால், பருப்பு உள்ளிட்டவை விலை உயரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்தில் 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதே போல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்(வங்கிகளின் டெபாசிட்களுக்கு ரிசர்வ் வங்கி தரும் வட்டி), 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும், வங்கிக் கடன்களுக்கான தவணை செலுத்தும் அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.


நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்கு வகிக்கும் மாநிலங்களில்தான் கொரோனா அதிகமாகப் பாதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தொழில் உற்பத்தி 17 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்த சூழலில், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குக் கடன் வட்டியில் சலுகை அளிக்கப்படும். தொடர் ஊரடங்கால் அடுத்து வரும் மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலை உயரலாம்.இவ்வாறு சக்தி காந்த தாஸ் கூறினார்.

You'r reading வங்கி கடன் தவணை செலுத்த மேலும் 3 மாத அவகாசம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்க அனுமதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்