இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..

கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு உருவாகி 125 ஆண்டுகளாகி விட்டன. இந்த கூட்டமைப்பின் ஆண்டு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கொரோனாவால் பாதித்த ஏழை, நடுத்தர மக்களுக்காக ரூ.53 ஆயிரம் கோடியில் நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் என்று நான் நம்புகிறேன். புதிய கண்டுபிடிப்புகள், சிறுகுறு தொழில்கள், விவசாயம் அனைத்தும் விரைவில் முன்னேற்றப் பாதைக்குச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.

You'r reading இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்