நாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..

8,909 Coronavirus Cases In India In 24 Hours.

இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. நேற்று ஒரே நாளில் புதிதாக 8909 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் 18 லட்சம் பேருக்கு மேல் பரவி, ஒரு லட்சம் பேரைக் காவு வாங்கி விட்டது. அதிக நோய்ப் பாதிப்பு உள்ள நாடுகளில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.


இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 8,909 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்து விட்டது. இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சத்து 7615 ஆக உயர்ந்துள்ளது. இதில், ஒரு லட்சத்து 303 பேர் குணமடைந்துள்ளனர். 48.31 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதால், மக்களுக்கு கொரோனா மீதான பயம் குறைந்துள்ளது. எனினும், இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5815 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 72 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 2455 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 24,586 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 197 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 17,617 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 556 பேர் பலியாகியுள்ளனர்.

You'r reading நாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதியின் 97வது பிறந்தநாள்.. நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்