இந்தியாவில் கொரோனா பலி 6348 ஆக உயர்வு.. 2.26 லட்சம் பேருக்கு பாதிப்பு..

Total number of Covid-19 cases in India now at 2.26 lakhs.

நாட்டில் இது வரை 2 லட்சத்து 26,700 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 6348 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக இது 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


நேற்று முன் தினம் அதிகபட்சமாக 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 9851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டுமே 274 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 6348 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2லட்சத்து 26,700 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 9462 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 10,960 பேருக்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.

You'r reading இந்தியாவில் கொரோனா பலி 6348 ஆக உயர்வு.. 2.26 லட்சம் பேருக்கு பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் இது வரை 27,256 பேருக்கு கொரோனா.. பலி 220 ஆக அதிகரிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்