கொரோனா பரவலில் சீனாவை நெருங்கும் மகாராஷ்டிரா மாநிலம்..

With over 80K cases, Maharashtra soon to overtake China record.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 80,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலில் சீனாவை நெருங்கியிருக்கிறது இந்த மாநிலம்.
இந்தியாவில் இது வரை 2 லட்சத்து 36,657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், ஒரு லட்சத்து 14,073 பேர் குணமடைந்துள்ளனர். 6642 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியிருக்கிறது.

இங்கு நேற்று வரை 80,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 35,156 பேர் குணமடைந்துள்ளனர். 2849 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இது வரை 84 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவிருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் இதே போல் தொடர்ந்தால், அடுத்த வாரத்தில் சீனாவை முந்தி விடும்.நாட்டின் 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 15,762 பேர் குணமடைந்துள்ளனர். இது வரை 232 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லியில் 26,334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 10,315 பேர் குணமடைந்துள்ளனர். 708 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் இது வரை 19,094 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 13,003 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 1190 பேர் உயிரிழந்துள்ளனர்.ராஜஸ்தானில் 10,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 7,559 பேர் குணமடைந்து விட்டனர். 218 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் 8996 பேர் கொரோனா பரவிய நிலையில், 5878 பேர் குணமடைந்துள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 9733 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் 5648 பேர் குணம் அடைந்துள்ளனர். 257 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 7,303 கொரோனா பரவியிருந்த நிலையில், 2,912 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 366 பேர் பலியாகியுள்ளனர்.பீகாரில் 4596 பேருக்கு கொரோனா பரவியிருந்த நிலையில், 2,200 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 4303 பேருக்கு கொரோனா பரவிய சூழலில், 2576 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். 73 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
கேரளா உள்பட மற்ற மாநிலங்களில் 3 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

You'r reading கொரோனா பரவலில் சீனாவை நெருங்கும் மகாராஷ்டிரா மாநிலம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா வைரஸ்.. டிரம்ப் பேச்சு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்