நாட்டில் ஒரே நாளில் 9971 பேருக்கு கொரோனா.. பலி 6929 ஆக அதிகரிப்பு

Covid-19 cases in India rise to 2.46 lakhs.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9971 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் தினமும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் தினமும் 500, 600 பேருக்குத்தான் கொரோனா பரவியது. கடந்த 2 நாட்களாகத் தினமும் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்படுகிறது.


நாடு முழுவதும் நேற்று ஒரு லட்சத்து 42,069 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. நேற்று மட்டுமே 287 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 6929 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2 லட்சத்து 46,628 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 11,929 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 20,406 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.

You'r reading நாட்டில் ஒரே நாளில் 9971 பேருக்கு கொரோனா.. பலி 6929 ஆக அதிகரிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பரவலில் உலக அளவில் இந்தியா 5வது இடம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்