அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உள்ளதா? தனிமையில் இருக்க முடிவு..

Delhi CM Arvind Kejriwal will undergo #COVID19 test tomorrow.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு நேற்று வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா நோய்க்கு 770 பேர் பலியாகியுள்ளனர். எனினும், அங்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தினமும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு நேற்று திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய்சிங் கூறுகையில், முதல்வர் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சலும், வறட்டு இருமலும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். நாளை(ஜூன்9) அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

You'r reading அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உள்ளதா? தனிமையில் இருக்க முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பா,ஜவா? அதிமுகவா? இயக்குனர் சக்தி சிதம்பரம் விளக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்