இந்தியாவில் கொரோனா பலி 7466 ஆக அதிகரிப்பு.. 2.66 லட்சம் பேருக்கு பாதிப்பு..

India reports 9,987 new Covid-19 cases in 24 hrs, death toll now at 7,466.

இந்தியாவில் 2.66 லட்சம் பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 7466 பேர் உயிரிழந்தனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய் பரவி வருகிறது.


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9987 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. நேற்று மட்டுமே 331 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 7466 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் இது வரை 2 லட்சத்து 66,598 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 29,215 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 29,917 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 87 ஆயிரம் பேர், தமிழ்நாட்டில் 33 ஆயிரம் பேர், டெல்லியில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

You'r reading இந்தியாவில் கொரோனா பலி 7466 ஆக அதிகரிப்பு.. 2.66 லட்சம் பேருக்கு பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவித்தபடி நடத்தப்படுமா? ஐகோர்ட் ஜூன் 11ல் தீர்ப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்