இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தொடுகிறது.. உலக அளவில் 4வது இடம்..

India reports the highest single-day spike of 10,956 new #COVID19 cases.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 8498 ஆக உயர்ந்திருக்கிறது.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நாட்டில் இது வரை 2 லட்சத்து 97,535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 47,195 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 41,842 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


நாடு முழுவதும் நேற்று மட்டுமே 396 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 8498 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 3607 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அங்கு மொத்தத்தில் 97,648 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3580 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் தமிழகத்தில் 38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 349 பேர் பலியாகியுள்ளனர். இவற்றுக்கு அடுத்து டெல்லி, குஜராத், ம.பி. மாநிலங்களில் கொரோனா அதிகமாகப் பரவியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தொடும் நிலையில், உலக அளவில் 4வது இடத்திற்கு வந்து விட்டது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தொடுகிறது.. உலக அளவில் 4வது இடம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பீகார், அரியானாவை விட ராயபுரத்தில் கொரோனா சாவு அதிகம்.. ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்