டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு திடீர் காய்ச்சல்.. கொரோனா பரிசோதனை..

Delhis Health Minister Satyendar Jain admitted in Hospital.

டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. அங்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.டெல்லியில் கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆம் ஆத்மி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தினமும் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்து வந்தார்.மேலும், அவர்தான் மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சைகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தார்.


இந்நிலையில், அவருக்கு நேற்று மாலையில் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமானதால் அவர், டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அந்நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு திடீர் காய்ச்சல்.. கொரோனா பரிசோதனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பலி 10 ஆயிரம் நெருங்குகிறது,.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்