ஊரடங்கால் கொரோனா பரவலை தடுத்துள்ளோம்.. பிரதமர் மோடி பேச்சு..

India is much better placed than many other nations. Indias recovery rate is rising: PM

கேரளாவில் உள்ள ரெவரனெட் மார்த்தோமா சிரியன் சர்ச்சின் தலைமைப் பதவியில் உள்ள ஜோசப் மார்த்தோமாவின் 90வது பிறந்த நாள் தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்சில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:வறுமையை ஒழிப்பதிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் சிறந்த பணியை மார்த்தோமா ஆற்றியுள்ளார். அவரது பணி மிகவும் பாராட்டத்தக்கது.


இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்று பலரும் கணித்தனர். ஆனால், ஊரடங்கு செயல்படுத்தியதாலும், அரசின் பல்வேறு முயற்சிகளாலும், மக்களின் முழு ஒத்துழைப்பாலும், கொரோனா பரவலைத் தடுப்பதில் இந்தியா மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. நாட்டில் 8 கோடி குடும்பங்களுக்குச் சமையல் கேஸ் இணைப்பு கொடுத்து, 8 கோடி சமையலறைகளைப் புகையில்லா சமையலறைகளாக மாற்றியிருக்கிறோம். மத்திய அரசின் திட்டத்தில் ஏழைகளுக்கு ஒன்றரை கோடி வீடுகளைக் கட்டித் தந்துள்ளோம்.
இவ்வாறு மோடி பேசினார்.

You'r reading ஊரடங்கால் கொரோனா பரவலை தடுத்துள்ளோம்.. பிரதமர் மோடி பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமூகப் பரவலே இல்லையா? முதல்வர் கருத்தை மறுக்கும் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்