பெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொடுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி

People crowded in heavy rain queue to donate blood

நேற்று இரவு 8 மணி அளவில் கேரளாவின் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்தில் இருந்து வழிமாறி சுவரில் மோதியது. கனமழையின் காரணமாக, விமானிகளுக்கு ஓடுதள பாதை சரியாகத் தெரியாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது சம்பவ இடத்திலேயே விமானிகள் 2 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

பெருமழையும் பேருதவி!

விபத்து குறித்த தகவல் அறிந்ததுமே விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள், விபத்து நடந்த பகுதியில் குவிந்துள்ளனர். அங்கு மீட்புப் படையினர் வரத் தாமதமாவதை அறிந்து தாங்களே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்சிலும், தங்கள் வண்டிகளிலும் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளனர். இதன்பின் மீட்புப் படையினர் வந்த பிறகும், அவர்களுடன் சேர்ந்து உதவி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரும் கோழிக்கோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் என்பதை அறிந்து, ரத்த தானம் செய்வதற்காக இரவோடிரவாக கிராம மக்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். பிரம மக்களே பேருதவியால் இழப்புகள் பெருமளவில் தடுக்கப் பட்டிருக்கிறது.

You'r reading பெரும் மழையிலும் குவிந்த மக்கள்.. ரத்தம் கொடுக்க வரிசை.. கேரளா நெகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோழிக்கோடு விமான விபத்து.. விசாரணைக்கு உத்தரவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்