மகனின் தேர்வுக்காக 106 கி.மீ சைக்கிள் பயணம்.. வியக்க வைத்த தந்தையின் பேரன்பு!

106 km bicycle ride for sons choice .. Fathers surprise!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை மீண்டும் எழுத, ரூக் ஜனா நாகின் என்ற கல்வித் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தவருக்கு, செவ்வாய்க்கிழமை தேர்வு நடந்துள்ளது. ஆனால் தேர்வு மையம் இவர்களின் கிராமத்துக்கு அருகில் இல்லாமல், கிராமத்தில் இருந்து 106 கி. மீ. தொலைவில் தார் நகரத்திலிருந்தது. ஊரடங்கால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அசீஸ் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த விஷயம் சோபாராமுக்கு தெரியவர, மகனைத் தேர்வு எழுத வைக்கத் தார் நகரத்துக்கு செல்வது என முடிவெடுத்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாததை உணர்ந்த அவர், மகனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்வது என முடிவெடுத்து, மூன்று நாள் சாப்பாட்டுக்கு ரொட்டிகளை எடுத்துக்கொண்டும், நண்பரிடம் 500 ரூபாய்க் கடன் வாங்கிக்கொண்டும், தனது கிராமத்தில் இருந்து தார் நகரத்தை நோக்கி சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

பகலில் மட்டுமே இருவரும் பயணம் செய்துள்ளனர். இரவில் வழியில் எங்காவது நிறுத்தி உறங்கிக் கொள்வதை வழக்கமாக்கி இருக்கிறார்கள். பின்பு சரியான நேரத்தில் மகனைத் தேர்வு மையத்தில் சேர்த்து தேர்வு எழுத வைத்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய சோபாராம், ``நான் ஒரு தினக்கூலி. என் மகனுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால், அதற்கு எதையும் செய்யத் தயார். எதுவும் அவனை தடைப்படுத்திவிடக் கூடாது" எனப் பேசியுள்ளார்.

தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தபோது, அவர்களுக்கு அரசு அதிகாரிகள் ஆச்சரியப்படுத்தினர். இவர் சைக்கிள் தார் நகரம் வந்த செய்தி அறிந்து, தேர்வு முடியும் முன்பே அரசு அதிகாரிகள் அங்கு வந்து, காத்திருந்துள்ளனர். தந்தை மகனை அழைத்துக்கொண்டு உணவிட்டு அதிகாரிகள், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். தன் மகனுக்கு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக சோபாராம் செய்த செயல் குறித்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உட்படப் பலர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்கள்.

You'r reading மகனின் தேர்வுக்காக 106 கி.மீ சைக்கிள் பயணம்.. வியக்க வைத்த தந்தையின் பேரன்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - செக் மோசடி வழக்கில் மலையாள நடிகர் சரண், நீதிமன்றம் முடியும் வரை சிறை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்