கேரள அரசு மீது நாளை நம்பிக்கை இல்லா தீர்மானம்

Gold smuggling case, motion of non confidence in kerala assembly tomorrow

திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கக் கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள முதல்வர், முக்கிய அரசு அதிகாரிகள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தெரிவித்தது. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்கும் தொடர்பு உள்ளதால் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கைவருக்கும் இந்த கும்பலுடன் தொடர்பு உள்ளது என்றும், எனவே சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி விடுத்துள்ளன. இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஒரு கார் ஒர்க் ஷாப் திறப்பு விழாவில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். எனவே அறிக்கை விடுத்தன.

இந்நிலையில் நாளை கேரள சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து நாளைய கூட்டத்தில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதுதொடர்பாக சட்டசபை செயலாளரிடம் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் இடதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருப்பதால் இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

You'r reading கேரள அரசு மீது நாளை நம்பிக்கை இல்லா தீர்மானம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சேத்தன் சவுகானின் மரணத்திற்கு கொரோனா அல்ல, மோசமான சிகிச்சை தான் காரணம் பரபரப்பு புகார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்