கொரோனா காலத்தில் உகந்ததாக இல்லை கேஎஃப்சியின் 64 வருட விளம்பர வாசகம் கட்

Kfc removes 64 year old finger lickin slogan

உலகப் பிரசித்தி பெற்ற கேஎஃப்சி நிறுவனம் தொடங்கி 64 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 64 வருடங்களாக இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் ஒரு பிரசித்தி பெற்ற வாசகத்தைப் பயன்படுத்தி வருகிறது. :ஃபிங்கர் லிக்கின் குட்' என்பது தான் அந்த வாசகம் ஆகும். தற்போது உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா நோய் பலருக்கும் உயிர் பயத்தை அளித்துள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், கைகளைக் கழுவாமல் கண்களிலோ, மூக்கிலோ, வாயிலோ தொடக்கூடாது என்றும் உலக சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தங்களது 'ஃபிங்கர் லிக்கின் குட்', என்ற வாசகம் நெருடலாக இருப்பதை கேஎஃப்சி நிறுவனம் உணர்ந்தது. இதையடுத்து கடந்த 64 வருடங்களாகப் பயன்படுத்தி வந்த இந்த விளம்பர வாசகத்தை இப்போது கேஎஃப்சி நிறுவனம் நிறுத்தி விட்டது. இந்த வாசகங்களை மறைத்துத் தான் தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

You'r reading கொரோனா காலத்தில் உகந்ததாக இல்லை கேஎஃப்சியின் 64 வருட விளம்பர வாசகம் கட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனிமையில் இருந்த நண்பனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்ற விஜய்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்