பகவானை சுட்டுக் கொல்வதே அடுத்த திட்டம் - கௌரி லங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்

கௌரி லங்கேஷைத் தொடர்ந்து, மற் றொரு எழுத்தாளரான கே.எஸ். பகவானை சுட்டுக் கொல்வதே தங்களின் திட்டமாக இருந்தது என்று, போலீசிடம் பிடிபட்ட இந்து யுவசேனா நிர்வாகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கௌரி லங்கேஷைத் தொடர்ந்து, மற் றொரு எழுத்தாளரான கே.எஸ். பகவானை சுட்டுக் கொல்வதே தங்களின் திட்டமாக இருந்தது என்று, போலீசிடம் பிடிபட்ட இந்து யுவசேனா நிர்வாகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகத்தில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கடந்த 2017 செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவிலுள்ள அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சந்தேகப்படும்படியாக துப்பாக்கி வைத்திருந்த கே.டி. நவீன் குமார் என்பவரை சிறப்புப் புலனாய்வுக்குழு பிடித்து விசாரணை செய்தது.

அப்போது நவீன் குமார் ‘இந்து யுவசேனா’ என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் கர்நாடகா தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்து இயக்கங்களோடு நெருக்கம் கொண்ட இவருக்கு, கௌரி லங்கேஷ் கொலையோடு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

அதனடிப்படையில், நவீன் குமாரை தங்களின் காவலில் எடுத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கௌரி லங்கேஷை அடுத்து, எழுத்தாளர் கே.எஸ். பகவானைக் கொல்லவும் இந்து யுவசேனா அமைப்பினர் திட்டமிட்டிருந்ததாக நவீன் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

“கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் (நவீன்குமார்) நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் இதேபோல இன்னொரு எழுத்தாளரான கே.எஸ். பகவான் என்பவரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது; அதற்காக துப்பாக்கியுடன் தயாராகும்போதுதான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அதிகாரியும், பெங்களூரு மேற்கு துணை ஆணையருமான அனுசெத் தெரிவித்துள்ளார்.

கௌரி லங்கேஷ் கொலைதான், கே.டி.நவீன்குமாருக்கு முதல் கொலை என்று கூறப்படுகிறது. அந்த கொலையை மிகவும் கச்சிதமாக செய்த காரணத்தால் அடுத்த கொலைக்கும் (பகவான்) இவருக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனினும் பணம் கொடுத்தவர்கள் யார் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பகவானை சுட்டுக் கொல்வதே அடுத்த திட்டம் - கௌரி லங்கேஷ் கொலையாளி வாக்குமூலம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் காலமானார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்