15 வருடம் கழித்து சிறையில் இருந்து வெளியில் வந்த தந்தையிடம் மகள் கேட்ட உதவி...அதற்கு தந்தை என்ன செய்தார் தெரியுமா...?

The daughter asked her father for help when he was released from prison after 15 years ...

சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனந்த் சிறைக்கு செல்லும் போது அவரது ஒரே ஒரு மகளுக்கு 1 வயது மட்டுமே ஆகியிருந்தது. சிறையில் ஆனந்துக்கு 15 வருடங்களும், 5 மாதங்களும் ஆன நிலையில் நன்னடத்தை கைதிகளை விடுவிக்க மாநில அரசு தீர்மானித்தது. இதன்படி ஆனந்துக்கும் விடுதலை கிடைத்தது.

சிறையிலிருந்து விடுதலையான உடன் மனைவி மற்றும் பிளஸ் 1 படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக ஆனந்த் ஆவலுடன் வீட்டுக்கு சென்றார். அப்போது, ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள தனக்கு செல்போன் வாங்கித் தரமுடியுமா என்று ஆனந்திடம் அவர் மகள் கேட்டார். மகளை படிக்க வைத்து டாக்டராக்க வேண்டும் என்பது தான் அவரது கனவாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் ஆன்லைனில் படிப்பதற்கு தனது வீட்டில் டிவியோ, செல்போனோ, கம்ப்யூட்டரோ எதுவும் இல்லை என்பதை அப்போது தான் அவர் உணர்ந்தார்.

ஆனந்த் 15 வருடங்களாக சிறையில் வேலை பார்த்ததற்கான சம்பளத்தை அவர் சேமித்து வைத்திருந்தார். அந்தப் பணத்தில் தனது மகளுக்கு அவர் செல்போன் வாங்கிக் கொடுத்தார். இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், 'சிறைக்கு சென்ற பின்னர் தான் எனக்கு படிப்பின் முக்கியத்துவம் தெரிய வந்தது. என்னுடைய மகள் டாக்டராக வேண்டும் என்பது தான் எனது ஆவல். அவளுக்கும் அது தான் கனவாக உள்ளது.

அந்த கனவுக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது. எனவே தான் நான் சிறையில் வேலை பார்த்து கடந்த 15 வருடங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை எனது மகளின் படிப்புக்காக செலவு செய்ய தீர்மானித்தேன் என்றார்.

You'r reading 15 வருடம் கழித்து சிறையில் இருந்து வெளியில் வந்த தந்தையிடம் மகள் கேட்ட உதவி...அதற்கு தந்தை என்ன செய்தார் தெரியுமா...? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - "மம்மி சேவ் மீ" அடுத்து ஒடிடியில் வெளியாக இருக்கும் திகில் தமிழ்படம்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்