நியூசிலாந்தை முந்திய இந்தியா.. சைலஜா டீச்சரின் சத்தமில்லாத ஒரு சாதனை!

India ahead of New Zealand .. Sailaja Teachers silent achievement!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது மற்றும் அந்த வைரஸ் புதுமையான சிந்தனைகளை முன்வைத்தது குறித்த சிந்தனையாளர்களை கணக்கெடுத்து பிரிட்டன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், கொரோனவை கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு டீச்சர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாரும் அல்ல கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா டீச்சர் தான். (ஆம்.. இவர் டீச்சராக இருந்து அமைச்சராக மாறியவர்)

இந்தப் பட்டியலில் சைலஜா டீச்சருக்கு முதலிடமும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு 2ம் இடமும் கிடைத்துள்ளது. கொரோனா தொற்று முதன்முதலில் கேரள மாநிலத்தில் தான் உறுதிசெய்யப்பட்டது. அப்போது கேரளாவில் அதிவேகமாக கொரோனா பரவியது. அப்போது, கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சமூக இடைவெளியை தீவிரமாக அமல்படுத்தியது மூலம் கொரோனா வைரஸை சமூக பரவல் ஆக்காமல் பார்த்துக்கொண்டார் சைலஜா. கொரோனா வைரஸ் மட்டுமல்ல.. நிபா வைரஸ் கட்டுப்படுத்தியத்திலும் சைலஜாவின் பங்கு அளப்பரியது.அவரின் பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்றவர் தற்போது இந்த கௌரவத்தையும் பெற்றிருக்கிறார்.

You'r reading நியூசிலாந்தை முந்திய இந்தியா.. சைலஜா டீச்சரின் சத்தமில்லாத ஒரு சாதனை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓரே ரவையில் 5 வகையான டிபன் செய்வது எப்படி??வாங்க பார்க்கலாம்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்