டெல்லி அரசு பள்ளிகளின் சாதனை.... 500 மாணவர்கள் JEE தேர்வில் தேர்ச்சி!

Achievement of Delhi Government Schools .... 500 students pass JEE exam!

ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மைய நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (சி.எஃப்.டி.ஐ) ஆகியவற்றில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வு, இந்த மாத தொடக்கத்தில் நடந்தது. COVID-19 தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இதில் டெல்லி அரசுப் பள்ளிகளில், படித்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு JEE-Mains தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், டெல்லியைச் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில், ``டெல்லி அரசுப் பள்ளிகளில் பயின்ற 510 மாணவர்கள் இந்த ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். JEE தேர்வுகளில் கடந்த 3 ஆண்டுகளில் டெல்லி அரசுப் பள்ளிகளில் தகுதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை முறையே, 2020- 510, 2019- 473, 2018- 350. ஒவ்வொரு மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். டெல்லி அரசுப் பள்ளிகளின் மற்றொரு மிகப் பெரிய சாதனை இது" என நெகிழ்ந்து கூறியுள்ளார்.

You'r reading டெல்லி அரசு பள்ளிகளின் சாதனை.... 500 மாணவர்கள் JEE தேர்வில் தேர்ச்சி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் திலீப் ஜாமீன் ரத்தாகுமா? 18ம் தேதி தெரியும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்