சீனாவால் கடினமான சோதனை.. எல்லை பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங்!

rajnath singh talks about china

சீனா இந்தியா இடையேயான லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக முக்கியமான தகவல்களை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்டு இருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ``சீனா உடனான எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீரவில்லை. என்றாலும், நமது நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையில் கடினமான சோதனைகளை எதிர்கொண்டு நாட்டை காத்து வருகின்றனர்.

லடாக் எல்லை பிரச்சனையின் காரணமாக இந்தியச் சீன நல் உறவில் தாக்கம் ஏற்படக் கூடும். லடாக் எல்லையில் சீனா அத்துமீறி உள்ளே நுழையக் கூடாது. எப்போதும் இந்தியா அமைதியவே விரும்புகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சீனா வன்முறையில் ஈடுபட்ட போது துணிச்சல் மிக்க நமது வீரர்கள் சீனாவின் அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்தினர். நமது நாட்டு மக்கள் ராணுவத்திற்குப் பக்கபலமாக இருப்பதைக் காண்பிக்கும் வகையில் பிரதமரின் லடாக் பயணம் இருந்தது. மலைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்குக் குளிர்காலத்திற்குத் தங்குவதற்கு ஏற்ப தேவையான சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன" எனக் கூறியுள்ளார்.

You'r reading சீனாவால் கடினமான சோதனை.. எல்லை பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகர் இயக்கிய படத்துக்கு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்