ஆந்திரா, கேரளாவை பதறவைக்கும் கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்பு!

Corona frightens Andhra and Kerala

லாக் டவுன் விதிகள் தளர்த்தபட்டப் பிறகு இந்தியாவில், கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் தினமும் 1 லட்சத்துக்கு நெருக்கமான அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. அதே நேரம் தொற்று கண்டறியப்படுபவர்களை விட கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் குறைவான பேருக்குத்தான் தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நமது அண்டை மாநிலங்களான கேரளா, மற்றும் ஆந்திராவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.

ஆந்திராவில் 7,228 பேருக்கு கொரோனா!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 6,46,530 ஆக அதிகரிப்பு; மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்

கேரளாவில் 5,376 பேருக்கு கொரோனா!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 5,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 42,786 ஆக அதிகரிப்பு; மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

You'r reading ஆந்திரா, கேரளாவை பதறவைக்கும் கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதைப்பொருள் விவகாரம்.. தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு திடீர் சம்மன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்