ஐ.நா. பொதுச் சபையில் மோடி இன்று பேசுகிறார்..

PM Modi to address UNGA on Saturday.

ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75வது ஆண்டு கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறை அனைத்து தலைவர்களின் பேச்சும், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இதன்படி, நியூயார்க் அரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்குப் பிரதமர் மோடியின் உரை இடம் பெறுகிறது. எதிர்காலத்தில் ஐ.நா.வின் பணிகள், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் உலக நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் உரையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசும் போது காஷ்மீர் பிரச்சனையை மறைமுகமாகக் குறிப்பிட்டு இந்தியாவைக் குறை கூறியிருந்தார். அவரது உரையின் போது இந்தியப் பிரதிநிதி மிஜிட்டோ வினித்தோ வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஐ.நா. பொதுச் சபையில் மோடி இன்று பேசுகிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கடத்திய 300கிலோ கஞ்சா சிக்கியது.. 7 பேர் கைது.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்