ஜஸ்வந்த்சிங் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்..

P.M. Narendra Modi condoles death of former Union Minister Jaswant Singh.

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
வயது முதிர்வு காரணமாக ஜஸ்வந்த்சிங்கிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடந்த ஜூன்25ம் தேதி, டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இன்று காலை 6.55 மணிக்கு அவர் காலமானார்.


அவர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். வெளியுறவு துறை, பாதுகாப்பு துறை மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்தவர். 30 ஆண்டுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜஸ்வந்த்சிங் முதலில் ஒரு ராணுவ வீரராகவும், பின்பு நீண்டகால அரசியல்வாதியாகவும் தீவிரமாக பணியாற்றினார். வாஜ்பாய் ஆட்சியில் அவர் முக்கியமான துறைகளை பொறுப்பு வகித்தார். நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளில் ஒரு வலுவான அடையாளத்தை பதிவு செய்தார். அவரது மறைவால் வேதனை அடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஜஸ்வந்த்சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஜஸ்வந்த்சிங் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னைக்கு அடுத்து 2வது இடத்தில் கோவை.. 12 மாவட்டங்களில் பரவும் கொரோனா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்