நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இணையதளத்தில் திடீர் கோளாறு.

NEET results declared today

நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இணையதளத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். பின்னர் உடனடியாக கோளாறு சரி செய்யப்பட்டது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வு எழுத மொத்தம் 15.6 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் 14.37 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். பல பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததாலும், மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்தாலும் தான் மாணவர்களால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கொரோனாவால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று மாலை nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த இணையதளங்களில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களால் உடனடியாக முடிவுகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக கோளாறு சரி செய்யப்பட்டது.ஸ்கோர் கார்டு வடிவில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. மொத்த மதிப்பெண்கள், அகில இந்திய அளவிலான ரேங்க், கேட்டகரி ரேங்க், ஒவ்வொரு பாடத்திற்குமான நீட் சதவீதம், கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஆகியவை இந்த ஸ்கோர் கார்டில் உள்ளன.

You'r reading நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இணையதளத்தில் திடீர் கோளாறு. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாங்காக்கில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரம்: ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் .

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்