மின் கம்பிகள் இல்லா நகரமானது வாரணாசி!

மின் கம்பிகள் இல்லா நகரமாக மாறியுள்ளது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி.

பிரதமர் மோடியை வெற்றி பெறச் செய்த வாரணாசி தொகுதிக்கு மோடி வளர்ச்சி வாக்குறுதிகள் பலவற்றை அள்ளி வீசியிருந்தார். கங்கையை தூய்மைப்படுத்துதல், வாரணாசி நகரை சுகாதாரமாக்கல் எனப் பல வாக்குறுதிகளை மக்களுக்காக ஆண்டுக்கணக்காக நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில் அதில் ஒரு வாக்குறுதியான மின் கம்பிகள் இல்லா வாரணாசியை சில ஆண்டுகளிலேயே உருவாக்கியுள்ளனர். தலைக்கு மேல் மின் கம்பிகளால் நிறைந்து காணப்பட்ட நாட்டின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று வாரணாசி. 

இன்று பூமிக்கடியில் மின் கம்பிகள் அனைத்தும் புதைந்து இருக்கும் வகையிலான உயரிய தொழில்நுட்பத்தை வாரணாசி நகரம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு 432 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மின் கம்பிகள் இல்லா நகரமானது வாரணாசி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `அமித்ஷாவுக்கு என்ன தெரியும்?’- ட்விட்டரில் ஓர் அணியான இரு மாநில முதல்வர்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்