புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு.. ஒப்புக்கொண்ட அமைச்சர்!

pakistan minister accepts role in pulwama attack

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது. காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறையில் சொந்த ஊர் சென்று மீண்டும் பணிக்குத் திரும்பும்போது ஜம்மு அல்லது ஸ்ரீ நகரில் சில நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.

பின்னர் அனைவரையும் மொத்தமாக பணியிடங்களுக்கு ஏராளமான வாகனங்களில் அணிவகுப்பாக அனுப்புவது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி அணிவகுப்பாக 78 வாகனங்களில் 2500 வீரர்கள் செல்லும் போது தான் இந்தக் கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.இந்த வழக்கில் சமீபத்தில்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் கொடூர தாக்குதல் பாகிஸ்தான் அரசு உதவியுடன் நடந்தது என்று இந்திய அரசு தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது. ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்துவந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு இந்த தாக்குதலில் நேரடி தொடர்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியதில், ``இந்தியாவை அதன் இடத்துக்கே சென்று தாக்கியிருக்கிறோம். இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய சாதனை. இம்ரான் தலைமையில் நமக்கு வெற்றி இது. இதில் நம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது" எனக் கூறி இருக்கிறார்.

You'r reading புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு.. ஒப்புக்கொண்ட அமைச்சர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எய்ட்-கோர் பிராசஸர்... குவாட் காமிரா... விழாக்கால விலையில் ரியல்மீ சி15.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்