இன்றே கடைசி.. பப்ஜியை இழுத்து மூடும் இந்திய அரசு!

last day to pubg in india

சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். இது தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது. இதன் இந்திய விநியோக உரிமத்தைச் சீனாவிலுள்ள டென்சென்ட் கேம்ஸ் என்ற நிறுவனம் எடுத்துள்ளது.

இதற்கிடையே, பப்ஜிக்கு தடை விதித்து இருந்தாலும், ஏற்கனவே அதை டௌன்லோட் செய்தவர்கள் தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் விளையாடி வந்தனர். புதிதாக பதிவிறக்கம் மட்டுமே செய்ய முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அதுவும் தடை செய்யப்பட இருக்கிறது. இனி ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் விளையாட முடியாது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட இருக்கிறது. இதனால் இன்றே கடைசியாக பப்ஜி விளையாட முடியும்.

இந்தியாவில் பப்ஜியை சுமார் 5 கோடி பேர் ஆக்டிவ் பயனாளிகளாக இருந்து விளையாடி வந்தனர். இதற்கு அடிமையாகி, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் பப்ஜி விளையாட்டை இந்தியாவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தென் கொரிய நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் சோகமாகி இருக்கின்றனர்.

You'r reading இன்றே கடைசி.. பப்ஜியை இழுத்து மூடும் இந்திய அரசு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடப்பாடியை டென்ஷனாக்கிய இளைஞர்கள்.... சசிகலா பெயரால் பசும்பொன்னில் நடந்த சம்பவம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்