டிசம்பர் முதல் மீண்டும் முழு ஊரடங்கு... மத்திய அரசின் பிளான் என்ன?!

central government speaks about lock down

கொரோனா தொற்று முன்பை விட இந்தியாவில் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதேநேரம் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று உச்சம் பெற்று வருகிறது. இரண்டாவது அலையின் காரணமாக கேரளாவில் இப்போதும் ஒருநாளைக்கு 7000 பேருக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மாநிலங்களில் இரண்டாம் அலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செய்துவருவதாகவும் செய்திகள் கசிந்தன.

இது குறித்து தற்போது மத்திய அரசு பேசியுள்ளது. அதில், ``மீண்டும் ஊரடங்கு என்ற தகவல்கள் வதந்தியே. அப்படி ஒரு எண்ணம் தற்போதை மத்திய அரசிடம் இல்லை. ஊரடங்கு தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை" எனக் கூறியுள்ளது. மத்திய அரசு இப்படி தெரிவித்தாலும், தலைநகர் டெல்லியில் கொரோனா 2ம் அலை வெகுவாக பரவி வருகிறது. இதனால் தற்போது அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு இறங்கியுள்ளது.

You'r reading டிசம்பர் முதல் மீண்டும் முழு ஊரடங்கு... மத்திய அரசின் பிளான் என்ன?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்களுக்கு தடை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்