தீபாவளியில் சீன பொருட்களை புறக்கணித்த இந்தியர்கள்... சர்வே சொல்லும் முடிவு என்ன?!

இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. அப்போதே இன்னும் பப்ஜி உள்ளிட்ட மேலும் பல செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தற்போது பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ப்ரண்டஸ உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளைத் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதேபோல் சீனப் பொருட்களையும் இந்தியர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை. இந்த பண்டிகை காலத்தில் சீன பொருள்களுக்கு எதிரான மனநிலை இந்திய மக்களிடம் நிலவியதாக ஒரு சர்வே தெரிவித்துள்ளது. Local Circles என்ற சமூக ஊடகதள நிறுவனம்தான் இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்தியாவின் 204 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரம் பேரிடம் எடுத்த அந்த சர்வேயில் 71 சதவீதம் பேர் சீனப்பொருட்களை வாங்காமால் தவிர்த்தது தெரியவந்துள்ளது. இந்த சர்வேயின் முடிவுகள் மக்களின் தேவையை இந்திய தயாரிப்புகளை கொண்டே பூர்த்திசெய்ய முடியும் என்பதை காட்டுகிறது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading தீபாவளியில் சீன பொருட்களை புறக்கணித்த இந்தியர்கள்... சர்வே சொல்லும் முடிவு என்ன?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாவூற வைக்கும் காரசாரமான நண்டு தொக்கு செய்வது எப்படி??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்