இந்தியர்கள் இல்லா அமெரிக்காவுக்கு ஏதுடா அழகு?- கேள்வி எழுப்பிய அமெரிக்க குடியேற்ற ஆலோசனை மையம்

அமெரிக்கவாழ் இந்தியர்களின் இணையர்களுக்கு விசா வழங்குவதில் ட்ரம்ப் விதிக்கும் கெடுபிடிகளுக்கு எதிராக அமெரிக்கக் குடியேற்ற ஆலோசனை மையமே கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களில் பணிப்புரிய எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை, இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தன.

இந்நிலையில், “பை அமெரிக்கன்ஸ், ஹயர் அமெரிக்கன்ஸ்” என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்1பி விசாவிற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தார். குறிப்பாக அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் இந்தியர்களாகவே உள்ளனர்.

இவர்களின் இணையர்கள் அதாவது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் ஒருவரின் மனைவியோ கணவனோ அமெரிக்காவில் வாழ வழங்கப்படும் விசா விதிமுறைகளிலும் முன்னாள் அதிபர் ஒபாமா வழங்கி வந்த அத்தனைச் சலுகைகளையும் மாற்றி அமைக்கவுள்ளதாக தற்போதைய அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவுகளை வழங்கத்தொடங்கினார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து அமெரிக்கக் குடியேற்ற ஆலோசனை மையம், "வெளிநாட்டு மக்களின் திறமைகள் அமெரிக்காவுக்குக் கூடுதல் அழகியலையே தருகிறது. குறிப்பாக இந்தியர்களின் திறமைகள் இல்லாமல் அமெரிக்காவில் கூடுதல் அழகு ஏது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

You'r reading இந்தியர்கள் இல்லா அமெரிக்காவுக்கு ஏதுடா அழகு?- கேள்வி எழுப்பிய அமெரிக்க குடியேற்ற ஆலோசனை மையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆஸி. மோசமான தோல்வி - 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்