கிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம்

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் 25 கி.மீ. சுற்றளவில் உள்ள 2,940 மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை கோரிய உத்திர பிரதேச அரசு தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, "மரங்கள் ஆக்ஸிஜனை தரக்கூடியவை. அவற்றின் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன், அவை இன்னும் உயிர் வாழக்கூடிய காலத்தை கருத்தில் கொண்டே அளவிடப்படவேண்டும்.

100 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை வெட்டுவதையும் புதிதாக கன்று நடுவதையும் சமமாக கருத இயலாது," என்று கூறியுள்ளது. வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக ரூ.138.41 கோடி தருவதாகவும் உத்திர பிரதேச அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. போக்குவரத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதாக கூறப்பட்ட வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. வாகனங்கள் வேகமாக சென்றால் விபத்துகள் அதிகமாகும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், துல்லியமான மதிப்பீட்டை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

You'r reading கிருஷ்ணர் பெயரை கூறி ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாண்ட்யா, ஜடேஜா பறத்தல் ஆட்டம்: மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்