போராட்ட களத்தில் தொடரும் சோகம்... கவலையில் மூழ்கிய விவசாயிகள்!

இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 10வது நாளை எட்டியிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை கோரிக்கையாக இருக்கிறது. இதற்காக, சளைக்காத தீரத்துடன் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தில் சில சோகமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது தெரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் போராட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் உயிரிழந்துள்ளது தான் அந்த சோகமான சம்பவம். இறந்தவர்கள் பெரும்பாலும் வயது மூத்தவர்கள். டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் இரவு முழுவதும் வெட்ட வெளியில் சாலை ஓரங்களில் தங்கியுள்ளனர். இதனால் உயிரிழப்பு நேர்ந்து வருகிறது.

உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தினாலும், அதனை தாங்கிக்கொண்டு தங்கள் கோரிக்கைக்காக, மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இறந்த விவசாயிகள் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

You'r reading போராட்ட களத்தில் தொடரும் சோகம்... கவலையில் மூழ்கிய விவசாயிகள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்