அரசை எதிர்த்தால் தீவிரவாதிகளா.. ராகுல்காந்தி கண்டனம்..

மோடி அரசுக்கு எதிர்ப்பவர்கள் எல்லாருமே தேசவிரோதிகள் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்ட பதிவில், மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் தேசவிரோதிகள். கவலைப்படும் பிரமுகர்கள் நகர்ப்புற நக்சல்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா பரப்புபவர்கள், பலாத்கார பாதிப்புக்கு உள்ளோனார் யாருமே கிடையாது, போராடும் விவசாயிகள் காலிஸ்தான் தீவிரவாதிகள், பெரும் முதலாளிகள் சிறந்த நண்பர்கள்... என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம் பற்றி கடந்த வாரம் ராகுல் வெளியிட்ட ட்விட்டில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று (பிரதமர்) சொன்னார்கள். ஆனால், விவசாயிகளின் வருமானம் பாதியாகி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் வருமானம் 4 மடங்காக அதிகரித்துள்ளது. மோடி அரசு பொய்களின் அரசாக உள்ளது. சூட்-பூட் சர்க்காராக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

You'r reading அரசை எதிர்த்தால் தீவிரவாதிகளா.. ராகுல்காந்தி கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்காது.. மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்