தேர்தலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... கள்ளக் காதலனுடன் ஓடிய பாஜக வேட்பாளருக்கு கிடைத்த ஓட்டு 38

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்பு கணவன் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த பாஜக பெண் வேட்பாளருக்கு 38 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. பக்கத்து வார்டில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட அவரது கணவரும் தோல்வியடைந்தார். கேரளாவில் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் நகராட்சிகள் தவிர மாநகராட்சி, கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இடது முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிய பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பலத்த அடி கிடைத்துள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்பு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த பாஜக பெண் வேட்பாளருக்கு 38 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் மாலூர் பஞ்சாயத்தில் 14 வது வார்டில் போட்டியிட்டவர் ஆதிரா (வயது 26). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவரது கணவர் தனேஷ் 15வது வார்டில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக பாஜக முக்கிய தலைவர்களும் பிரசாரம் செய்தனர். இந்நிலையில் தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் இருக்கும்போது ஆதிரா திடீரென மாயமானார்.

பிரச்சாரத்திற்கு வராததால் அவரை பாஜக தலைவர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து ஆதிராவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காசர்கோடு பகுதியை சேர்ந்த அவரது கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. தேர்தலுக்கு ஒரு சில நாட்கள் முன்பு வேட்பாளர் ஆதிரா, கணவன் குழந்தையை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்தது பாஜகவுக்கு கடும் நெருக்கடியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்ட போது ஆதிராவுக்கு வெறும் 38 ஓட்டுகளே கிடைத்தன. அந்த வார்டில் இடது முன்னணியை சேர்ந்த ரேஷ்மா சஜீவன் என்பவர் 1,500க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 15வது வார்டில் போட்டியிட்ட ஆதிராவின் கணவர் தனேஷும் தோல்வியடைந்தார்.

You'r reading தேர்தலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... கள்ளக் காதலனுடன் ஓடிய பாஜக வேட்பாளருக்கு கிடைத்த ஓட்டு 38 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் உயிர் போராட்டம்.. நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்