காரில் போரின்போது நாட்டை வாஜ்பாய் எப்படி பாதுகாத்தார்?!... ரகசியங்களை சொல்லும் புத்தகம்

பாஜக மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 1996 முதல் 1997 வரை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியபோதும், 1998 முதல் 1999 முதல் பிரமராக இருந்தபோதும் அவருக்கு தனிச் செயலாளராக சக்தி சின்ஹா என்பவர் பணியாற்றினார். இதற்கிடையே, `வாஜ்பாய்: இந்தியாவை மாற்றிய ஆண்டுகள்' என்ற புத்தகத்தை சக்தி சின்ஹா எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் வரும் டிசம்பர் 25-ம் தேதி வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளில் விற்பனைக்கு வருகிறது.

இந்தப் புத்தகத்தில் கார்கில் போர் குறித்து குறிப்பாக சக்தி சின்ஹா எழுதியுள்ளார். இதில், கார்கில் போர் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச வேண்டும் என வாஜ்பாய் என்னிடம் கேட்டார். ஆனால், போர் காரணமாக ஜம்மு - காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு தொடர்பு கொள்ள தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும், தாங்கள் செய்த முயற்சியால் 4 முறை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேசினார். ஆனால், போரில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பிரதமருக்கு துரோகம் செய்ததாக வாஜ்பாய் கருதினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகம் குறித்து சக்தி சின்ஹா கூறுகையில், இன்று அடல் பிஹாரி வாஜ்பாய் அன்புடன் நினைவுகூரப்படுகிறார். ஆனால் 1998-ம் ஆண்டு அவர் தலைமையில் ஆட்சித்து அமைத்து ஆட்சியை வழிநடத்த கடுமையாக கஷ்டப்பட்டார். இதுபோன்ற தருணத்திலும், அவர் அணுசக்தி போன்ற முக்கியமான முடிவுகளை எடுத்தார். பல்வேறு கட்டத்தில் பிரச்சனை செய்யும் பாகிஸ்தானுடன் ஒரு நட்புக்கரம் நீட்டினார். கார்கில் போர் உருவெடுத்தபோது நாட்டை எவ்வாறு பாதுகாத்தார் என்பது எங்களுக்கு தான் தெரியும் என்று தெரிவித்தார்.

You'r reading காரில் போரின்போது நாட்டை வாஜ்பாய் எப்படி பாதுகாத்தார்?!... ரகசியங்களை சொல்லும் புத்தகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் பயங்கரம்: கார் கொள்ளையர்களால் சுடப்பட்ட இந்தியர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்