கொரோனா முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய டாப் 10 எம்.பி.க்கள்.. ராகுல்காந்தி 3-ம் இடம்!

கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய டாப் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ராகுல் காந்தி, தேஜஸ்வி சூர்யா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்தார். தற்போது, கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா பொது முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து டெல்லியைச் சேர்ந்த மக்கள் கருத்துக்கணிப்பு இணைதளமான ஐ சிஸ்டம்ஸ் கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆய்வு நடத்த தொடங்கியது. அந்தந்த தொகுதி மக்களின் கருத்துகளின் அடிப்படையில் தற்போது, மக்களுக்கு சேவையாற்றிய முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இடம் பிடித்துள்ளார்.

பட்டியலில், மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் அனில் ஃபிரோஜியா முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, அதலா பிரபாகர ரெட்டி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி), ராகுல் காந்தி (காங்கிரஸ்), மஹுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்), எல்.எஸ். தேஜஸ்வி சூர்யா (பாஜக), ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவசேனா), சுக்பீர் சிங் பாடல் (எஸ்ஏடி), சங்கர் லால்வானி (பாஜக), சுமதி என்கிற தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), நிதின் ஜெயராம் கட்கரி (பாஜக) உள்ளிட்டோர் வரிசையாக இடம் பிடித்துள்ளனர்.

You'r reading கொரோனா முடக்கத்தின்போது மக்களுக்கு சேவையாற்றிய டாப் 10 எம்.பி.க்கள்.. ராகுல்காந்தி 3-ம் இடம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பீகார் பரபரப்பு... போலீஸ் மீது கொதிக்கும் தேநீரை முகத்தில் ஊற்றிய பெண்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்