`ரஷ்யாவின் நல்லுறவுக்கு இந்திரா காந்தியே காரணம்!- சோனியா காந்தி பெருமிதம்

`ரஷ்யாவுடன் இந்தியா நல்லுறவு பேணுவதற்கு காரணம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான்’ என்று தெரிவித்துள்ளார் சோனியா காந்தி.

பல ஆண்டுகளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. ஆனால், முதுமை காரணமாகவும் தன் உடல் நலத்தில் கவனம் செலுத்துவதற்காகவும் அந்தப் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்துதான் ராகுல் காந்தி அந்தப் பதவிக்கு வந்துள்ளார்.

இருப்பினும் தீவிர அரசியிலிலிருந்து அவர் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனியா காந்தி, `ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் முன்னாள் பிரதமர் இந்தியா காந்தி எடுத்த முன்னெடுப்புகள்தான்’ என்று கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், `இந்திரா காந்தி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக எடுத்த நடவடிக்கையில் ஒன்றுதான் ரஷ்யாவுடனான உறவு. அவர் அப்போது போட்ட அஸ்திவாரம்தான் இன்று வரை தொடர்கிறது. நேருவே, ரஷ்யாவிற்கு பயணப்பட்டப் பிறகுதான் தனது முதல் நூலை எழுதினார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `ரஷ்யாவின் நல்லுறவுக்கு இந்திரா காந்தியே காரணம்!- சோனியா காந்தி பெருமிதம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடங்கியது மோடி உரை! ராணுவ கண்காட்சியில் பா.ஜ.க தொண்டர்களுக்கே அனுமதியில்லை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்