`பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவருக்கு ஆதரவு கோரியவர் ராகுல்!- புயலைக் கிளப்பும் மத்திய அமைச்சர்

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, `ராகுல் காந்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கைது செய்தவருக்கு ஆதரவாக நின்றவர்தான்’ என்று கூறி டெல்லி வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

காஷ்மீரில் 8 வயதுச் சிறுமி அசீஃபா, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேபோல, உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் சிங் செங்கர் 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, `காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ காயத்ரி பிராசத் பிரஜபதிக்கு ஆதரவாக பேசியவர்தான்’ என்று கூறியுள்ளார்.

ராகுல் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு விஷயங்களையும் முன்வைத்து பாஜக அரசை விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான் இராணி, `ராகுலுக்கு பாஜக-வை விமர்சிக்க எந்தத் தகுதியுமை கிடையாது. அவர் அரசியல் ஆதாயத்துக்காக எந்த முடிவை வேண்டுமானாலும் எடுப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவருக்கு ஆதரவு கோரியவர் ராகுல்!- புயலைக் கிளப்பும் மத்திய அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பதட்டமும் எரிச்சலும் துரத்துகிறதா..? நீரிழிவாகக்கூட இருக்கலாம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்