இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தில் இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல்கட்ட விநியோகம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. சிரம் இன்ஸ்டியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாகச் சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்பட கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடத் தொடங்கி 6 நாட்கள் ஆன நிலையில் இதுவரை இது தொடர்பாக யாருக்கும் எந்த சுகாதாரக் குறைபாடும் ஏற்பட வில்லை. இதற்கிடையே இந்திய தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசிகள் நம் அண்டை நாடுகளான பங்களாதேஷ், மியான்மர், நேபாளம் உள்பட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தென்கொரியா, கத்தார் உள்படப் பல நாடுகள் நம்மிடம் தடுப்பூசி கேட்டு விண்ணப்பித்துள்ளன.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த கட்டத்தில் மோடி தடுப்பூசி எடுத்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. மோடி மட்டுமில்லாமல் பல மாநில முதல்வர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களும் தடுப்பூசி போட தயாராகி வருகின்றனர். இரண்டாவது கட்டத்தில் 50 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

You'r reading இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட தயாராகிறார் பிரதமர் மோடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்