இந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு!

இந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5% ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை போன்று உலக நாடுகளுக்கு தங்களுக்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்தினர். இந்த ஊரடங்கு காரணமாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பிற்கு பிறகான 2021-ம் ஆண்டின் உலக நாடுகள் அடையும் பொருளாதார வளர்ச்சி சதவிகித பட்டியலை சர்வதேச ஆணையம் கணித்துள்ளது. குறிப்பாக, இந்தியா இந்த ஆண்டு 11.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா 8.1 சதவிகிதமும், ஸ்பெயின் 5.9 சதவிகிதமும், பிரான்ஸ் 5.5 சதவிகிதமும் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கணிப்புகளின் மூலம் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற சிறப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது. சர்வதேச ஆணையம் வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி சதவிகித பட்டியலில் இந்திய மட்டுமே இரட்டை இலக்க சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்த ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 11.5%... சர்வதேச நிதியம் கணிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்