20ஆயிரம் விண்ணப்பங்கள்...191 நாடுகள்...ஒபாமா அறக்கட்டளையில் ஓர் இந்தியப் பெண்!

ஒபாமாவின் அறக்கட்டளையின் சர்வதேச சிறந்த நிர்வாகத் தலைவர்களின் டாப்-20 பட்டியலில் ஒரேயொரு இந்தியப் பெண் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனது அறக்கட்டளையின் மூலம் சர்வதேச அளவில் சமூகத்துக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தனது பதவிக்காலம் நிறைவடைந்த உடனே சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்தாலோசித்தார். தனது 'ஒபாமா அறக்கட்டளை' மூலம் உலகம் முழுவதும் பணியாற்ற சிறந்த நிர்வாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சித் திட்டத்தை அறிவித்தார்.

ஒபாமா அறக்கட்டளையின் கீழ் பணியாற்ற 191 நாடுகளிலிருந்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தடைந்தன. இதில் இறுதியாக உலகம் முழுவதிலிமிருந்து 20 சிறந்த தலைவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் ஒரேயொரு இந்தியப் பெண்ணும் இடம்பெற்றுள்ளார். ப்ரீத்தி ஹெர்மான் என்ற பெண் இந்தியாவில் உள்ள 'சேஞ்ச்.ஆர்க்' என்ற சமூக அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் இதற்கு முன்னர் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான பெண் என்ற விருதையும் ஐநா சபையில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா அறக்கட்டளையின் டாப் 20 பட்டியலில் நவ்தீப் காங் என்ற அமெரிக்கவாழ் இந்தியரும் அமெரிக்காவின் சார்பில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 20ஆயிரம் விண்ணப்பங்கள்...191 நாடுகள்...ஒபாமா அறக்கட்டளையில் ஓர் இந்தியப் பெண்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அள்ள அள்ள குறையாத அட்சய திருதியன்று கூறவேண்டிய மந்திரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்