நாட்டின் விதிமுறைகள் எங்களுக்கு முக்கியம் 500 பேரின் கணக்குகள் முடக்கிய ட்விட்டர் நிறுவனம்!

இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக 500 ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு பலர் எதிப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தின் போது அவதூறு பதிவுகளை பதிவிட்டதாக 1000-க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் கோரிக்கையைடுத்து 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், வெளிப்படைத் தன்மையே ஆரோக்கியமான பொதுத்தள உரையாடலுக்கு அடித்தளம். ட்விட்டர் விதிகளை மீறிய நூற்றுக்கணக்கான கணக்குகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வன்முறை, துஷ்பிரயோகம், தீங்கு விளைவிக்கலாம் என்பது போலான பதிவுகள் கொண்ட ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் நூறு மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்டுகள் வெளியிடப்படுவதால், பயனர் வெளிப்பாட்டை மதிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாக உள்ளது. அதேநேரத்தில் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில கணக்குகளை முடக்கியுள்ளோம். முடக்கப்பட்ட கணக்குகள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அந்தக்கணக்குகள் பயன்பாட்டிலேயே இருக்கும். இருப்பினும், செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கணக்குகள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பொதுத்தளத்தில் பயனாளர்கள் சுதந்திரமான கருத்துப்பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆதரிக்கிறோம். அதனை அரசின் விதிகளுக்குள் கொண்டு வரவும் முயற்சி செய்கிறோம்' என விளக்கம் அளித்துள்ளது.

You'r reading நாட்டின் விதிமுறைகள் எங்களுக்கு முக்கியம் 500 பேரின் கணக்குகள் முடக்கிய ட்விட்டர் நிறுவனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐஸ்விற்கும் சமுத்திரக்கனி படத்துக்கு திடீர் சிக்கல்.. தியேட்டரா? ஒடிடியா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்